ஜான் F கென்னடி ஏர்போர்ட், நியூயார்க்.
மாலை நான்கு மணி, லுப்தான்சா விமானம். விமான பணிப்பெண்கள், ஒவ்வொருவரின் இடுப்பு பெல்ட்டை சரியாக அணிந்து இருக்கார்களா என்று சரி பார்த்த வண்ணமாய் இருக்க, விமானமோ மிக மெதுவாக தன்னுடைய இறக்கையை குறுகிக்கொண்டு வானத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது.
மாலதி, ஜன்னல் வழியாக நியூயார்க்கின் அழகை மேலிருந்து பார்த்து கொண்டு, கோபியின் கரங்களை இறுக பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
புத்தம் புது தாலி நெஞ்சில் மின்ன, புதிய உலகம், புதிய கலாச்சாரம், புதிய வாழ்க்கையை தொடங்கப் போகிறோம் என்ற சந்தோஷம் மனதில் தோன்றினாலும், புதிய இடத்தில் எப்படி தனியாக குடும்பம் நடத்தப் போகிறோம் என்ற கவலையும் அவ்வப்பொழுது அவள் மனதில் தோன்றி மறைந்தது.
திருமணம் ஆகி மூன்று வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் தனிக் குடித்தனம், புது இடம், நீண்ட பயணம், உறவுகள் எல்லாம் தொலைவில் இருக்க, நினைக்கவே அவளுக்கு பிரமிப்பாகவும் அதேசமயம் எப்படி சமாளிக்கப் போகிறம் என்ற பயமும் தொற்றிக்கொண்டது.
கோபியின், கடந்த மூன்று வார நெருக்கத்தில், அவனுடைய குணாதியங்களை அவளால் எடை போட இயலவில்லை, அவனுக்கு கிடைத்ததே மூன்று வார விடுமுறைதான்.
அதற்குள், திருமணம், ஹனி மூன், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் விருந்து உபச்சாரம், விசா வாங்க சென்னை சென்றது, கோவில் குளம் சுற்றி வேண்டுதலை நிறைவேற்றியது போக, அதிகமாக பேசக் கூட அவர்கள் இருவருக்கும் தனிமையும், நேர அவகாசமும் கிடைக்கவில்லை.
இனி அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை, இனிமேல் மனம் விட்டு பேசலாம், சுற்றலாம், அவனுக்கு பிடித்த சமையலை செய்து கொடுத்து, அவன் மனம் குளிர உண்பதை கண்டு ரசிக்கலாம்,
இப்படி பலவாறு நினைத்தபடி அவள் மனம் மனவானில் இறக்கை இல்லாமலே பறக்க, விமானமோ மெதுவாக தரையை தொட்டது.
கஸ்டம்ஸ் செக்கிங், பேக்கஜ் செக்கிங் எல்லாம் முடிந்து, தங்களுடைய பெட்டிகளை எடுத்துக்கொண்டு, ஒரு டாக்ஸி மூலம், கோபி, தான் தங்கியுள்ள அப்பார்மென்ட்டைச் சென்றடைந்தனர்.
திருமணத்திற்கு முன் வரை தன்னுடன் பணிபுரியும் நண்பர்களோடு தங்கியவன், திருமணம் நிச்சியம் நடந்தவுடன், தனியாக வீடு பார்த்துm அப்பொழுதிலிருந்து வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி வைக்க ஆரம்பித்து விட்டான்
நீண்ட தூர பயணமும், நேர மாற்றமும், சரியான தூக்கமின்மையும், விமானத்தில் கொடுத்த உணவு பிடிக்காததாலும், பசியுடன் கூடிய களைப்பும், அவளுக்கு பசி மயக்கத்துடன் கூடிய ஒரு வித அயர்ச்சியைக் கொடுத்தது.
அது நவம்பர் மாதம், பனிக் காலம் என்பதால், ஒரே குளிராக இருந்தது, வெள்ளை பனி மழை எங்கும் பெய்த வண்ணம் இருக்க, தெரு எங்கும் ஒரே வெண்ணிறமாக இருந்தது.
புதுமணத் தம்பதிகளை, வரவேற்க, வானமே, வெள்ளை மலர்களை அவர்கள் மேல் தூவுவது போல் ஒரு தோற்றத்தை உண்டு பண்ணியது.
பனி மழையை முதல் முதலாக பார்ப்பதால், ஒரு ஆச்சிரியத்துடன் காரை விட்டு இறங்கி பனியைத் தொட குனிய, காலில் ஹீல்ஸ் செருப்பு அணிந்ததால் வழுக்க, அப்படியா சறுக்கி விழுந்துவிட்டாள், நல்லவேளை கோபி அருகில் இருந்ததால், தாங்கி பிடித்து அவளை அருகில் உள்ள படிக்கட்டில் அமர வைத்தான்.
புதிய வீட்டுக்கு நுழையும் முன்னே, இப்படி ஒரு தடங்கல் வந்துவிட்டதே என்று ஒரு மனக்கவலை அவளுக்கு ஆரம்பித்து, அவளை கண் கலங்க வைத்து விட்டது.
'என்ன ஆயிடுச்சுன்னு, இப்படி கண்ண கசக்க'
''முதல் முதலா வீட்டுக்கு நுழையும் பொது இப்படி ஆச்சேன்னு தான்..'
'இந்த சகுனம் பாக்கறது எல்லாம் எனக்கு பிடிக்காது.... சரி வா வீட்டுக்கு போவோம்'
அவன் சொன்னது அப்போதைக்கு ஆறுதல் தந்தாலும், உள் மனசில் எதோ தவறு நடைபெற போகிறதை உணர்த்தியது.
கோபி, வீட்டிற்குச் சென்றவுடன், முதல் வேலையாக அவளை ஆசுவசபடுத்தி,
படுக்கை அறையில் படுக்க வைத்து, பின்னர் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு, இருவருக்கும் வேண்டிய உணவை வாங்கி வர, நீண்ட தூரம் உள்ள, ஒரு இந்திய ஹோட்டலுக்குச் சென்று, நல்ல உணவை வாங்கி வந்தான்.
புதிய சூழல், அவளுக்கு ஒரே வித்தியாசமாக இருந்தது. அன்று வெள்ளிகிழமை, அடுத்து இரண்டு நாள்கள் விடுமுறை, அதற்குள், வீட்டிற்கு வேண்டிய சமையல் பொருள்களை வாங்கி, வீட்டையும் சுத்தப்படுத்தி, மாலதியையும் புது இடத்துக்கு தகுந்தவாறு தாயார் செய்து, திங்கள் முதல் வேலைக்கு செல்லலாம் என்றவாறு மனதில் எண்ணி தான் இரண்டு நாள் முன்னமே வந்து சேர்ந்தான் கோபி.
அவன் வாங்கி வந்த சாப்பாட்டை, மிகவும் பசியுடன் இருந்ததால், ருசியைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
அவள் பயண களைப்பில் இருந்ததால், படுத்தவுடன் தூங்கிவிட்டாள் அவளை இன்று எந்த தொந்தரவு செய்யாமல் அவனும் படுத்து உறங்கிவிட்டான்.
சனிக்கிழமை, மிக நீண்ட நேரம் தூங்கிவிட்டனர், பகல் பத்து மணி ஆகிவிட்டது, அப்பொழுது தான், கண்விழித்த மாலதி, எழுந்து சுற்றும பார்க்க, கோபியைக் காணவில்லை,
அவளுக்கு முன்னரே அவன் எழுந்து, காபி தயார் செய்து, குடித்து விட்டு, அமைதியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
'என்ன... எழுப்பி இருக்கலாம் இல்ல... நான் காபி போட்டு கொடுத்து இருப்பேனே...'
'நீ.. அசதியில் தூங்கறே.. எதுக்கு உன்ன டிஸ்டரப் பண்ணனுமுன்னு தான் எழுப்பல... அதும் இல்லாம ... உனக்கு எது எது எங்க இருக்குதுன்னு தெரியாது..
இல்லையா'
கோபியின் கூற்றும் சரியென்று உணர்நதவள. அவனிடம் கேட்டு, எந்த பொருள் எந்த இடத்தில் இருக்கிறது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டு, காபி தயார் செய்து, தன கையால் அவனுக்கு கொடுத்து தானும் பருகினாள்.
அன்று எங்கும் வெளியில் செல்லவில்லை, வீட்டை சுத்த படுத்துவது, கொண்டு வந்த பொருள்களை அடுக்கி வைப்பதுமாய் கழிந்தது.
பின்னர், செய்த சமையலை, இருவரும் உண்டனர். உண்ட மயக்கத்தில் உறங்கினர்.
நீண்ட நாளைக்குப் பிறகு, இருவரும மனம் விட்டு பேசி, தனிமையை நன்றாக அனுபவித்தனர், அன்றிரவு அவர்களுக்கு மற்றுமொரு தேநிலவாய்க் கழிந்தது.
வந்த இரண்டு நாளில், சிறிதளவு புது வீட்டையும், வீட்டில் உள்ள பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதை ஓரளவு அவள் பழகிக்கொண்டாள் .
மறுநாள் சண்டே, இன்று அவளை, அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் செல்ல தீர்மாணித்திருந்தான்.
முதல் முதலில் வெளியில் அழைத்து செல்வதால், கோவிலுக்கு செல்ல அவன்தான் முடிவெடுத்து இருந்தான்.
அவளும் குளித்து முடித்து, கோவில் செல்ல தயாரானாள். இருவரும் காரில் செல்ல, அவன் வழியில் பார்த்த இடங்களை, அவளுக்கு தெளிவாகவும் புரியும் படியாகவும் விளக்கிக் கொண்டிருந்தான்.
அவன் சொல்லச் சொல்ல ஆர்வத்துடன், அவனுடைய பேச்சை கூர்ந்து கவனித்தபடி அருகில் அமர்நதிருந்தாள்.
தனக்கு ஒரு நல்ல கணவனை கொடுத்ததற்காக , ஆண்டவனிடம் மனதார நன்றி சொல்லியவாறு அவனுடன் புறப்பட்டவள், கோவிலில் தான் சந்திக்கப் போகும் ஒரு பெண் மூலம் தன் வாழ்க்கை பெரிய சிக்கலை சந்திக்கும் என்பதை அறியாமலே,
.
(இதன் தொடர்ச்சி.... வரும் திங்கள்கிழமை... தொடரும்....)
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook











5 comments:
hai rishvan,
thirukural kavithaikaL & why this kolaveRi stories... Iam really surprised with ur pages.
vaazthukaL rishvan.
anbudan,
puthiyamaadhavi
mumbai
கதை நல்ல ஆரம்பம். புதுமணதம்பதிகள் வெளி நாட்டு வாழ்க்கைய ஆரம்பிக்கும் விதம் அழகான வர்ணனைகளுடன் நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.
ஏனிந்த கொலவெறி
’’’’’’’’’
’’’’‘’’’’
‘’’’’’’’’
’’’’’’’’’
‘’’’’’’’’
‘’’’’’’’’
‘’’’’’’’’
’’’’’’’’
‘’’’’’’’
அப்படியெல்லாம் கேட்க மாட்டேன்.
அருமையாக இருக்கு கதை வாழ்த்துகள்..
ஏனிந்த கொலவெறி
’’’’’’’’’
’’’’‘’’’’
‘’’’’’’’’
’’’’’’’’’
‘’’’’’’’’
‘’’’’’’’’
‘’’’’’’’’
’’’’’’’’
‘’’’’’’’
அப்படியெல்லாம் கேட்க மாட்டேன்.
அருமையாக இருக்கு கதை வாழ்த்துகள்..
http://niroodai.blogspot.com
கதை அழகாக நகர்கிறது..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
Post a Comment